Monday, February 05, 2007
Love Wax...!!!
Untitled
Love Like Wax
கவிதைகள் - 1 week ago
உன் அமைதியில் இருப்பது வலியற்ற புன்னகை,என் அருகினில் இருப்பது ஒரு மழலையின் தழுவல்.என் மார்போரம் நீ சாய்கையில் என்னுள் ஒரு மன நிம்மதி,நம்முள் நாம் இணைகையில் இதயத்தில் பரவசம்.
சந்தோஷம்
கவிதைகள் - 2 weeks ago
என்னுள் உள்ள சந்தோஷம்....எனக்கும் அனைவருக்கும்.என்னுள் உள்ள சந்தோஷம்....பல வண்ணங்களின் பிரகாசம்.என்னுள் உள்ள சந்தோஷம்....இருள் இல்லா புன்னகைக்கும் சுடர் ஒளி.என்னுள் உள்ள சந்தோஷம்....வலி, பயம் இல்லா பூந்தோட்டம்.என்னுள் உள்ள சந்தோஷம்....அனைவரும் ஒன்றே என்ற சமாதான உணர்வு.என்னுள் உள்ள சந்தோஷம்....துயரங்கள், கண்ணிர் இல்லாமை.என்னுள் உள்ள சந்தோஷம்....கடவுள் உள்ளடக்கம் அவரது வரைவு.என்னுள் உள்ள சந்தோஷம்....எனக்கே எனக்கு.
அமைதி
கவிதைகள் - 2 weeks ago
அமைதி.....மௌனம் என் மொழி.மௌனம் என் தனிமையின் ஊன்றுகோல்,மௌனம் என் ஆழ்ந்த சிந்தனையின் பயணம்.மௌனம் என் மனதின் சாந்தம்,மௌனம் என் விவேகம். மௌனம் என் சுதந்திரம், மௌனம் என் கண்ணீர் துளிகளின் அரவணைப்பு. மௌனம் என் அனுபவத்தின் அறிகுறி, மௌனம் என் காதோரம் பேசும் உற்ற நண்பன்.அமைதி...அமைதி எனக்கு நம்பிக்கை ஊட்டும் கருவி,நானே அமைதியின் இருப்பிடம்.
Untitled
கவிதைகள் - 1 month ago
நிற்க மறந்தன கால்கள்....பிடிக்க மறந்தன கரங்கள்...பார்க்க மறந்தன விழிகள்...மறக்க மறந்தன மனது. துடித்து எழுந்தன விழிகள்...விரைந்து ஓடின கால்கள்....பற்றிக் கொண்டன கரங்கள்...மனதில் நிலைத்தன நினைவலைகள்.
Love Like Wax