Love And Love Only

Monday, February 05, 2007

Love Wax...!!!

Untitled
 கவிதைகள் - 1 week ago

உன் அமைதியில் இருப்பது வலியற்ற புன்னகை,என் அருகினில் இருப்பது ஒரு மழலையின் தழுவல்.என் மார்போரம் நீ சாய்கையில் என்னுள் ஒரு மன நிம்மதி,நம்முள் நாம் இணைகையில் இதயத்தில் பரவசம்.
 
 
சந்தோஷம்
 கவிதைகள் - 2 weeks ago
என்னுள் உள்ள சந்தோஷம்....எனக்கும் அனைவருக்கும்.என்னுள் உள்ள சந்தோஷம்....பல வண்ணங்களின் பிரகாசம்.என்னுள் உள்ள சந்தோஷம்....இருள் இல்லா புன்னகைக்கும் சுடர் ஒளி.என்னுள் உள்ள சந்தோஷம்....வலி, பயம் இல்லா பூந்தோட்டம்.என்னுள் உள்ள சந்தோஷம்....அனைவரும் ஒன்றே என்ற சமாதான உணர்வு.என்னுள் உள்ள சந்தோஷம்....துயரங்கள், கண்ணிர் இல்லாமை.என்னுள் உள்ள சந்தோஷம்....கடவுள் உள்ளடக்கம் அவரது வரைவு.என்னுள் உள்ள சந்தோஷம்....எனக்கே எனக்கு.
 
அமைதி
 கவிதைகள் - 2 weeks ago
அமைதி.....மௌனம் என் மொழி.மௌனம் என் தனிமையின் ஊன்றுகோல்,மௌனம் என் ஆழ்ந்த சிந்தனையின் பயணம்.மௌனம் என் மனதின் சாந்தம்,மௌனம் என் விவேகம். மௌனம் என் சுதந்திரம், மௌனம் என் கண்ணீர் துளிகளின் அரவணைப்பு. மௌனம் என் அனுபவத்தின் அறிகுறி, மௌனம் என் காதோரம் பேசும் உற்ற நண்பன்.அமைதி...அமைதி எனக்கு நம்பிக்கை ஊட்டும் கருவி,நானே அமைதியின் இருப்பிடம்.
 
Untitled
 கவிதைகள் - 5 weeks ago
உறவுகள் நிலைப்பதில்லை, நினைவுகள் மறைவதில்லை.உணர்ச்சிகள் உறங்குவதில்லை, விடிவுகாலம் வெகுதூரமில்லை. கனவுகள் குறைவதில்லை, உண்மைகள் தோற்பதில்லை.நிஜங்கள் வாழ்க்கையில்லை, வாழ்க்கை நிஜமில்லை.
 
 
Untitled
 கவிதைகள் - 1 month ago
நிற்க மறந்தன கால்கள்....பிடிக்க மறந்தன கரங்கள்...பார்க்க மறந்தன விழிகள்...மறக்க மறந்தன மனது. துடித்து எழுந்தன விழிகள்...விரைந்து ஓடின கால்கள்....பற்றிக் கொண்டன கரங்கள்...மனதில் நிலைத்தன நினைவலைகள்.
 
 
Untitled
 கவிதைகள் - 2 months ago
சிந்தனைத் துளிகள் என் விழி வழியே,பொங்கி எழும் உன் நினைவினிலே.தெம்மாங்கு கானம் உன் இதழ்களிலே,வழிந்தோடும் உன் கொஞ்சும் மொழிகளிலே.நீ பேசும் மொழிகள் புதிது,உன் சிந்தனைகளும் புதிது.கற்பனையில் நான் வடித்த ஓவியம் நீயா,இனி எந்நாளும் என் துணை நீயே. 

Love Like Wax